tamil10

கொலை முயற்சி வழக்கு

நகல் படத்தில் நடித்த மண்ட நடிகர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது சினிமாப் பட்டி மக்கள் மத்தியில் கடும் பீதியைக் கிளப்பி உள்ளது...

காலம் காலமாக சினிமாப் பட்டியின் பல உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை ஆரவாரமாக வரவேற்று...உயிரைக் கொடுத்து...கையில் இருக்கும் கடைசி காசு வரைக்கும் செலவழித்து ஆராதித்து ஒப்பற்ற கலை சேவை செய்து வந்த தமிழ் ரசிக ஜனம் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்க முயற்சித்தோம்...

மண்ட நடிகர் பல காலமாக வயெலட், வெட்டிசன், மூனா, கெட்ட வாசம், ரீகன், முல்லா..போன்ற படங்களில் நடித்து அந்தப் படங்கள் திரைக்கு வந்து பலத் தரப்பட்ட மக்கள் மீது ஈவு இரக்கமின்றி அராஜகத்தைக் கட்டவிழ்த்தப் போதெல்லாம் கைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு..இப்போது நகல் படம் வந்த நேரத்தில் விழித்துக் கொண்டது ஓரளவு மன ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கிறோம்....

இன்னும் சிலர் மண்ட நடிகராவது பரவாயில்லங்க...கொஞ்சம் ஓ.கே தான்..... இன்னும் நிறைய பேர் இருக்காங்க பாஸ் அவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனையே தரலாம் பாஸ் அப்படின்னு அனியாயத்துக்கு பொங்கிட்டாங்க...அதுவும் குளவி, அழுகிய தக்காளி மகான், பல்லு, சேட்டைக்காரன் இப்படியெல்லாம் சின்னப்புள்ளங்க மேல எல்லாம் கூட டிவி மூலமா எல்லாம் கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்துற சின்ன சேனாதிபதி நடிகரை எல்லாம் கூட உள்ளே தள்ளுனாப் புண்ணியமாப் போவுமுங்க..

சினிமாப்பட்டி ரசிகனின் கொந்தளிப்பால் சினிமாப்பட்டி சேனாதி பதி நடிகர்களும்...பழைய புதிய ஸ்டார் நடிகர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்...தங்கள் மீதும் இப்படியான கொலை முயற்சி வழக்குகள் பாயலாம் எனக் கருதி முன் ஜாமீன் மனு மட்டுமின்றி இனி நடிக்கும் படங்களில் கதை மற்றும் நல்ல திரைக்கதையும் வேண்டுமெனத் தேடத் துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...

பாஸ் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அரசாங்கம் தான் கவனிக்கனும்...அரசியல் வாதிங்க தான் கவனிக்கணும்....ஒய் சினிமாப்பட்டி சிட்டிசன்களை டிஸ்டர்ப் பண்ணுறீங்க....பொதுவா ஒரு ரசிகரிடம் நாம் எக்குத் தப்பாக் கேக்குறீங்க...

பாஸ் எம்ப்பேர் சின்ன மலை....பசு மாடு வச்சு மில்க் வியாபாரம் பண்ணுறேன்...தமிழ்நாட்டுல்ல தான் பண்ணுறேன்...ஆனா நானே இதுவரைக்கும் என்னை வாழ வச்சது தமிழ் பால்...அழ வச்சது ஆந்திரா பால்ன்னு பாலை ஸ்டேட் வாரியா பிரிச்சதே இல்லை..ஆனா இந்த சினிமாப்பட்டிகாரங்க அப்படி எல்லாம் பாடும் போது மட்டும் நாங்க கைத்தட்டுணும்...எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க வெறும் நடிகன் அப்படின்னு நாங்க அவங்களை விட்டுரணும்....படா சோக்கா கீதுப்பா மேட்டர்

அப்புறம் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் டமிலுக்கு டமிலர்க்கும் தர்றதா பாடுனா மட்டும் நாங்க காசு கொடுத்து கேக்கணும்...உண்ணாவிரதத்துக்கு வா நைனா அப்படின்னு கூப்பிட்டா மட்டும் அப்பீட்டூன்னு அவங்க சொல்லுவாங்க அதுக்கும் நாங்க ரிப்பீட்டேன்னு சொல்லணும்ன்னா என்ன நைனா...படா காமெடியா கீதுப்பா...

அப்புறம் இந்த ஹாலிவுட்ல்ல எந்த ஸ்டாருமே...மை டிரிங்க் இஸ் அமெரிக்கன் இங்கிலீஸ் மில்க்...மை பாடி லக்கேஜ் கேஸ் ஆல் பிளாங்க் டு அமெரிக்கா அப்படின்னு சொல்ல மாட்டேங்குறாங்க...சோ அவங்களை அந்த ஊர் மக்களும் பொதுவா எந்தப் பிரச்சனைக்கும் கூப்பிடுறது இல்ல....நடிகன் நடிகனா இருந்தா அவனை யார்ப்பா இதுக்கெல்லாம் கூப்பிடப் போறா...அவன் அதையும் தாண்டி ட்ரை பண்ணும் போது தான் இப்படி கொலை முயற்சியிலே போய் முடியுது...

அய்யா பயானிதி அய்யா..தொடர்ந்து நீங்க தான் டமில் படம்...அதுவும் நெல்லை டமில் படம்...கோவை டமில் படம்...சென்னை டமில் படம்ன்னு எடுத்து சினிமாப்பட்டியையும் சினிமாப் பட்டி ரசிகனையும் காப்பாத்தணும்...ப்ளீஸ்....

சினிமாப் பட்டி ரசிகர்களின் ஏகோபித்த உணர்வுகளை பதிவு செய்த படி கச்சேரி செய்திகளுக்காக சினிமாப்பட்டியிலிருந்து ஷிவா.........:)
டொட்டடொய்ங் டொட்டடொய்ங்...இதனால் சினிமா பட்டி மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் நம்ம பாசக்கார சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பெரியவருக்கு சினிமாப் பட்டி வாழ் மக்கள் சார்பா நடத்தப்படும் நாலாயிரத்து நானூத்து எட்டாவது பாராட்டு விழாவுக்கு அனைவரும் கண்டிப்பாக கட்டாயமாக பாசத்தோடும் அன்போடும் பாராட்டு மேகங்களோடும் ( மேகம் விழாவில் மழையாக பொழிய) வந்து சேர வேண்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.....மிக முக்கியமாக விழாவுக்கு தலைமையேற்க வரும் அகில உலக சூப்பர் ஸ்டார்கள்....கேலக்சி நாயகன்கள்...பெரிய தளபதிகள்..குட்டி தளபதிகள்...வாய்ஸ் கேப்டன் ஸ்...மற்றும் மேடையேற போகும் அனைத்து வருங்கால சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் ஒரு நீளமான உரையை....அதாவது இது வரை கலந்து கொண்ட பாராட்டு விழாக்களில் தெரிவிக்காத பாராட்டுக்களை கொண்ட ஒரு உரையை தயார் செய்து முன் ஒப்புதலுக்காக அறிவான பஞ்சாயத்து ஆலய..ஆபிசில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

சினிமாப் பட்டியின் உயர்வான மக்களே...தமிழை தன் உயிராய் மதிக்கும் நம் பஞ்சாயத்து தலைவரை மகிழ்விக்கும் படி நம் தற்கால சினிமாவில் வரும் இலக்கிய கருத்து செறிவான..ஓமகசீயா...நாக்கமுக்க..ரண்டக்க..பல்லேலக்கா..டையலாமா..போன்ற இனிய கருத்து ஆழம் நீளம் அகலம் உள்ள பாடல்களை பாடி...சீரான தமிழ் உடைகளை உடுத்தி உடுக்கை அடித்து...உலக்கை இடித்து....மானாடா மயிலாட....காண்பவருக்கு எல்லாம்....ஆனந்த கூத்தாட....நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்

விழா மேடையின் இரு பக்கமும் பஞ்சாயத்து தலைவரின் பிஞ்சு மனம் விம்மும் போது உடன் விம்ம அப்படியே தும்ம....குரல் கம்ம...கண் கலங்க....அகில உலக நாயகன் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

கடைசியாக....விழாவுக்கு வரும் சினிமாப் பட்டி மக்களுக்கு அழைப்பு சீட்டோடு ஒரு துண்டு சீட்டும் வழங்கப்படும் அந்த சீட்டில் தங்கள் பெயரை எழுதி கருப்பும் சிவப்புமாய் முத்திரை குத்தி அங்கிருக்கும் பஞ்சாய்த்து அதிகாரிகளின் கையில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

விழா முடிவில் துணை பஞ்சாயத்து தலைவரும்...மத்திய முனிசிபாலிட்டி கமிட்டி சேர்மனும் சேர்ந்து மூன்று அதிர்ஷ்ட்டசாலிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்...அந்த மூன்று பேருக்கும்

பீலாகதி வாரனின் டின் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படம்...மற்றும் அதோகதி வயலின் ரெட் பெயிண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்... வைகை ஏரியா லவுட் வைன் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம் ஆகியவற்றில் நடிக்காமல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சிறப்பு அனுமதி இனாமாக அளிக்கப்ப்டும்...ஆகவே பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள் அனுமதியை வெல்லுங்கள்..டீலா நோ டீலா....சினிமா பட்டி மக்களே

இந்த அறிக்கை சினிமாப்பட்டி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இந்த அறிக்கை கேட்க பலரை நாம் தொடர்பு கொண்ட போது பலரும் இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி பஞ்சாயத்து தலைவர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காலவரையற்ற மவுன விரதம் இருப்பதாய் சைகை மொழியில் தெரிவித்தனர்...

அலட்டி நாட் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த மண்ட நடிகர் மட்டும் வீரமா வாயைத் திறந்து...ஐய் ஆ....இவ்ங்க ஏன்னை மெரட்டுராங்க..ஆனாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்...


இப்போ தலைப்பை படிச்சு பதிவை முடிங்க....

டிஸ்கி: இந்த அறிக்கையும் அதில் இருக்கும் கருத்துக்களும் சும்மா லுடுலுடுவாயி மட்டுமே...அது யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல....இது மெய் மெய் மெய்...மெய் மட்டுமே....

அமெரிக்காவில் ஆபிசர்

ஸ்ப்ப்ப்ப்பா.... நாங்க எல்லாம் ஒரே பிசி....

நம்ம ஆபிசர் பொட்டி தட்ட ஆரம்பிச்சு பலக் காலம் ஆச்சு...எம்புட்டு வருசமாவோ பொட்டி தட்டுறார்...இந்தப் பொட்டி தட்டுறவங்க எல்லாம் அடிக்கடி ஒரு பிளைட்டை புடிச்சு அங்கிட்டும் இங்கிட்டுமா போயிட்டு வரும் போது ஆபிசர் ஆளுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு அடுத்து சொல்லுற டயலாக் தான் மேலே நீங்கப் படிக்குற டயலாக்...

நம்ம ஆபிசரும் பல நாள் மொட்டை மாடியிலே நின்னு பறக்குற பிளைட்டுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் தெரியாம சில சமயம் பருந்தைக் காட்டி பொண்டாட்டி என்னிக்காவது ஒரு நாள் நான் அதுல்ல ஏறி பறக்கத் தான் போறேன் பாரேன்ன்னு சவுடால் விட்டுட்டு தான் இருக்கார்...

ம்ம்க்கும் பருந்துல்ல ஏறி பறந்த முதல் மனுச ஜென்மம்ன்னு கின்னஸ்ல்ல பேரு கட்டாயம் வாங்கிருவிங்கன்னு சொல்லுங்கன்னு ஆபிசரம்மா சொன்ன பொறவு தான்...அடக்கொக்க மக்கா பருந்துக்கு இவ்வளவு பந்தி வச்சு பஞ்ச் விட்டோம்ன்னு ஆபிசர் பீல் ஆன சம்பவம் ஏராளம்..

இந்த மளிகை கணக்கு எல்லாம் சின்ன பொஸ்தகத்துல்ல எழுதுவாங்களே...அப்படி ஒரு பொஸ்தகம் தீந்துப் போன நேரம்...ஆபிசரம்மா கையிலே சிக்குன பொஸ்தகம்...ஆபிசரோட...ம்ம்க்கும் நீங்க நினைச்சதே தான்...பாஸ்போர்ட் புக் தான்... பொங்குன ஆபிசரை அப்படி ஒரு நக்கல் பார்வை பாத்துட்டு ஆபிசரம்மா சொன்னது...பாஸ்போர்ட் எல்லாம் பிளைட்ல்ல பறக்கறவங்களுக்கு தான் வேணும்...அதுவும் நாடு எல்லாம் தாண்டி போகத் தான் வேணும்...உள்ளூர் பருந்து பார்ட்டிக்கு எல்லாம் எதுக்கு....கண்க்கு பொஸ்தகம் வாங்குற காசுல்ல ஒரு இரண்டு ரூவா மிச்சமாகுமில்ல...."

இரண்டு ரூவாயா...எம்புட்டு செலவு பண்ணி விடிகாலமே போய் லைன்ல்ல நின்னு எடுத்த பாஸ்போர்ட் மதிப்பு இரண்டு ரூவாயா...இந்த பாஸ்போர்ட்ல்ல ஸ்டாம்ப் விழல்லன்னா பாரு.... ஆபிசர் முடிக்கல்ல

இப்படியே தபால் ஆபிஸ் பக்கம் போய் நில்லுங்க.....யாராவது ஸ்டாம்ப் வாங்கி கீழே விடுறாங்களான்னு பாருங்க...பாஸ்போர்ட்ல்ல டக்குன்னு பிடிச்சுக்குங்க.....

ஆபிசருக்கு வெறியே வந்தும் பயன் இல்லை...

ஒரு தரம் பாக்கிஸ்தான் பார்டர் போனப்போ...அப்படியே லைட்டாக் காலை உள்ளே வச்சுட்டு பாஸ்போர்ட்டை நீட்டி ஒரு ஸ்டாம்ப் வாங்கிரலமான்னு யோசிச்ச போது...அங்கே நின்ன பாக்கிஸ்தான் அதிக சினேகிதமா துப்பாக்கியை தூக்கி பிடிச்ச ஸ்டைல்ல பாத்து...இங்கிட்டு ஸ்டாம்பிங் வேற இடத்துல்ல தான் கிடைக்கும் போலிருக்குன்னு முடிவை மாத்திகிட்டு மனசைத் தேத்திகிட்டு ஆபிசர் திரும்பிட்டார்...அடுத்தாப்பல்ல ராமேஸ்வரம் போனப்போ அங்கிருந்து இலங்கை பக்கம் தானே படகுல்ல போய் ஒரு ஸ்டாம்பிங்க் போட்டுராலமான்னு ஒரு யோசனை உதிச்சது.... விசாரிச்சதுல்ல போட்டுருவாய்ங்களாம்...ஸ்டாம்பிங் இல்ல...ஆளையேன்னு சொல்லி ஆசைக்கு அழகா ஆப்பு வச்சுட்டாங்க....

இப்படி எல்லாம் இருந்த ஆபிசர் வாழ்க்கையிலே தீடிர் திருப்பம்....பாஸ்போர்ட் ஆபிஸ் வீணாக் கொடுத்த பாஸ்போர்ட் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல்ல நம்ம ஆபிசர் பாஸ்போர்ட்டை சேக்கப் போன அந்த வினாடி விண்ணகத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம்...ஆபிசரோட பிராஜக்ட் மேனஜர் மண்டைக்குள்ளே விழுந்து....யாருமே இல்ல போறதுக்கு இருக்கத்து ஆபிசர் மட்டுமே அப்படின்னு ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வந்து.... போறீயான்னு கேக்க.....

அந்த நிமிசத்துல்ல இருந்து ஆபிசர் விசா ஸ்டாம்ப் ஆன அன்னிக்கு ஆபிஸ்ல்ல ஒரு மரம் வேரோடு பேந்து விழுந்த வரைக்கும் நடந்த அனைத்தும் தனி பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வுகள்....

அப்படியே பிளைட் ஏறுனப்போ...அந்த படிக்கட்டுல்ல ஆபிசர் சொல்ல நினைச்சது....

அலோ ஜென்டில்மேன் ஸ் லேடீஸ் கிட்ஸ்....நல்லாப் பாருங்க...ஒழுங்காப் பாருங்க...நானும் அமெரிக்காப் போறேன்...நானும் அமெரிக்காப் போறேன்....நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்......நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்..

யப்பா டிரைவர் வண்டியை நல்லா உசரமாத் தூக்கி எங்க வீட்டு மாடிப் பக்கமா ஒரு ரவுண்ட் விட்டு அமெரிக்காவுக்கு கிளப்பு....சும்மா டாப் கியர்ல்ல எடுக்கணும் புரியுதா....

நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...

இது தான் ஆபிசர் அமெரிக்கா வந்த கதை....


ஒரு ஒத்துமை பாத்தீங்களா...நான் அமெரிக்கா கிளம்புன அதே சமயம் தான் நம்ம ஆபிசரும் அமெரிக்கா கிளம்பியிருக்கார்....மக்கா இந்த ஆபிசரும் நானும் ஒண்ணுன்னு இன்னும் நினைச்சீங்கன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை சாமியோவ்...

இதர ஆபிசர் பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்

பதிவோடிகள் - 3

சிபிகுமார் வீட்டு மொட்டை மாடியில் உக்காந்து குசும்பனும் சிபிகுமாரும் தீவிரமா எதையோ யோசிச்சுட்டு இருந்தாயங்க....

"டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டே மாடிக்கு ஆயில்ஸ் ஏறி வந்துகிட்டு இருந்தார்..பின்னாடி பொட்டி படுக்கை எல்லாம் ஒரு சுத்து சுத்தி கையோட எடுத்துகிட்டு அல்ட்ரா மாடர்ன்னா ஒரு பைய வந்து நின்னான்...

"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் மூஞ்சியை மாஸ்க்கா செஞ்சு மாட்டிட்டு வந்த மாதிரி பதிவோடிகள்ல்ல ஒரு புது கேரக்டர்....." குசும்பன் காலை சுழத்தி சிபி தலையைத் தாண்டி எடுத்துப் போட்டுட்டு உக்காந்து ஒரு கேள்வி கேட்டாப்புல்ல...

"என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...

"டேய் என் பேரை ஷார்ட்டா கூப்பிடக் கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது.....அப்புறம் உன் பேரை நான் தமிழ் படுத்தி கூப்பிடுவேன் சொல்லிட்டேன்...." குசும்பர் டென்சன் ஆக...

"அட இல்லப்பா புல்லா சொல்லத் தான் வந்தேன்... மூச்சு வாங்க நடந்து வந்தேனா...அதுல்லா கொஞ்சம் கேப் விட்டதுல்ல மாறி போச்சிப்பா" ஆயில்ஸ் விளக்கம் கொடுக்க...

"ஆயில்ஸ் மாறி போகல்ல நாறி போயிருச்சு..." சிபிக்குமார் திரும்பி ப்ஞ்ச் டயலாக் சொல்லிட்டு வானத்தைப் பாத்து திரும்பவும் யோசனையாகிடுரார்.

"குசும்பா உனக்கு தெரிஞ்சவன் தானாமே...அப்படி தான் ஊர் முக்குல்ல நின்னு வழி கேட்டுட்டு இருந்தான் நான் தான் கூட்டி வந்தேன்...."

"டேய் நானெல்லாம் மக்கள் தொண்டன்டா....பல பேருக்கு என்னைத் தெரியும்...ஆனா அந்த பல பேரை எல்லாம் நான் தெரிஞ்சுக்க முடியுமா... முக்கா கிலோ மூளையை வச்சு முக்கா நிமிசம் யோசிச்சாக் கூட இந்த லாஜிக் புரியணுமே ஆயில்ஸ்...சரி சரி இந்த நாகேஸ் மூஞ்சியை எங்க பிக் அப் பண்ணியோ அங்கேயே ட்ராப் பண்ணிட்டு அவ பாக்கெட்ல்ல எதாவது இருந்தா எடுத்துட்டு வந்துரு....."

ஆயில்ஸ் சரின்னு தலையாட்டிட்டு திரும்ப...நாகேஷ் மாஸ்க்கை கழட்டிட்டு படு ஸ்டைலா தலையைத் தூக்குறார் அந்த புது கேரக்டர்...

"டேய் மாப்பி சென்ஷி நீயா சொல்லவே இல்ல.... என்ன இது மாஸ்க்"

"பன்னிக் காச்சல் மேட்டருக்கு மாஸ்க் போட்டா நல்லதுன்னு சொன்னாங்க அது தான் எனக்கு பிடிச்ச நாகேஷ் சார் மாஸ்க் போட்டுட்டு வந்தேன்...எப்பூடி?"

"அட பன்னிக் காச்சல் எல்லாம் உனக்கு வரவே வராதுடா மாப்பி....நீ வீணா பயந்துருக்க..."

"ம்ம்ம்ம் உண்மையாவா"

"பின்னே மனுசனுக்கு வர்ற வியாதி எல்லாம் உனக்கு வருமா சொல்லு....சரி....என்ன விசயம்...சொல்லு"

"மாப்பி காதல்டா.... அயாம் லவ் ஒண் கேர்ள்.....டீப்லி மேட்லீ...சின்சியர்லி....சூப்பர்லி....சீரியசஸ்லீ.....யு மை பிரண்ட் ஹெல்பி மீ...."

"மை பிரண்ட் ஹெல்ப் வேணும்னா மலேசியாவுக்குல்ல போகணும்... இங்கே எதுக்கு வந்த...?"

"நோ குசும்பு ப்ளீஸ்...லவ் அன்ட் லவ் ஒன்லி... நோ மேரேஜ் ஐ வில் டை....சீரியஸ்"

இதைக் கேட்டதும் அப்படியே எங்கிருந்தோ பேக் கிரவுண்ட் மீசிக் அதிர ஆரம்பிக்குது...

சிபிகுமார் முதுகு கை கால் எல்லாம் துடிக்க பொங்கி எழுந்து திரும்புறார்...

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... பாட்டு டெசிபல் ஏறுது...


சிபிகுமார் ஆயில்ஸ் குசும்பன் மூணு பேரும் புது கேரக்டரோட வேகமா நடந்து மாடி எல்லாம் ஜம்ப் பண்ணி வீதி எல்லாம் வேர்வை வழிய நடந்து அங்கிட்டும் இங்கிட்டும் வெறிதனமாய் பாத்துகிட்டு கடைசியா சிபிகுமார் வீட்டு முன்னாடி இருக்க ஒரு டிவிஎஸ் 50 வண்டியை ஸ்டார்ட பண்ணுறாங்க....

குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயில்ஸ் முன்னாடி செட்டில் ஆகுறார்.. சென்ஷி அப்போ நான் எப்படி வருவேன்ன்னு பரிதாபமாக் கேக்க...

ம்ம்ம் நீ முன்னாடி ஓடிகிட்டே வழி காட்டுனாத் தானே நாங்க பின்னாடியே வண்டியிலே வந்து பொண்ணைத் தூக்கி உன்னோடச் சேர்த்து வைக்க முடியும்....குசும்பன் லாஜிக்கா பதில் சொல்ல..

ஆகா அந்த ஊருக்கு எனக்கு வழி தெரியாதே...எப்படி நான் காட்டுவேன்..அதுவும் ஓடிகிட்டே....ரொம்ப கஸ்ட்டம் மாப்பி...அப்படின்னு சென்ஷி கையை விரிக்க...

அப்படி என்னடா ஊர்.......அது.... ஆயில்ஸ் ஆவேசமாகி கேக்க...

அது வந்து.....அமெரிக்கா மாப்பி....அது தான் என்னோட காதலி இருக்க ஊர்......பேக் கிரவுண்ட் மீசிக் அறுந்து ஓட....டிவிஎஸ் 50ஐ அப்படியே போட்டுட்டு மூணு பேரும் வந்தவனைத் திரும்பிக் கூட பாக்கமா நடையைக் கட்டுறாங்க...

டேய் மாப்பு.... நான் அவளை தீவிரமாய் லவ் பண்ணுறேன்டா....அவ இல்லன்னா மெய்யாலுமே செத்துருவேன்டா....வந்தவன் பீலிங்கா மெரட்ட... மூணு பேர் அப்படி இப்படி யோசிச்சி ஒரு முடிவுக்கு வர்றாங்க....

நண்பய்ன் ஆசைப் பட்டுட்டான்.... காதலிச்சிட்டான்... அதைச் சேத்து வைக்குறது தான் நட்பு அப்படின்னு பகலவன் பிரமீளாவே சொல்லியிருக்கார்..." சிபி தீவிரமான போஸ்ல்ல சொல்ல...

அது யார் பகலவன் பிரமீளா பலான பட டைரக்டர் பேர் மாதிரி இருக்கு....குசும்பன் சொல்ல....

அது நான் தான்...எனக்குள்ள இருக்க பின் நவீனத்துவ இலக்கியவாதியோட பேர் அது..சரி அதைப் பத்தி பொறவு பேசுவோம்..இப்போக் காதல் முக்கியம் கிளம்புங்க...ஸ்டார்ட் மீசிக்..."

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... மீண்டும் பாட்டு டெசிபல் ஏறுது...

டேய் மாப்பி அமெரிக்கா எப்படி போறது,.... ஆயில்ஸ் சிரீயசா யோசனையிலே கேக்க...

எதுக்கும் கவலைப் படாதீங்க அதுக்கெல்லாம் நம்ம பயபுள்ள ஒருத்தன் இருக்கான்....பாசக்கார பய....அம்புட்டு நேசக்காரன்...நட்புன்னா அப்படி ஒரு நண்பய்ன் அவன்...சொல்லிகிட்டே சிபிகுமார் போனைப் போடுறார்...சரியா மூணு வாட்டி ரிங் விட்டுட்டு கட் பண்ணுறார்....வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது காலர் ட்யூன் அடித்து அடித்து ஓய்கிறது...

என்ன இது....போனை போட்டப்பல்ல இல்ல..பேச வேண்டியது தானே...அது என்ன கட் பண்ணுறது...

அது தான் சொன்னோம்ல்ல பாசக்கார பைய...அவனே போன் போடுவான்....அவன் யார்ன்னு உனக்கு இப்போத் தெரியாது அமெரிக்கா போனாத் தெரிஞ்சுடும்...

அடுத்த சில நிமிடங்களில் போன் வருகிறது... புலி...புலி ஸ்பீக்கீங்....புலி ஸ்பீக்கீங் பிரம் யு என் ஓ.....

டேய் மாப்பி.....அப்படின்னு ஆரம்பிச்சி பின்னாடி சாங் ஒலிக்க...சிபிகுமார் எல்லா விவரத்தையும் ஆவேசமா சொல்ல போன் பேச்சு முடிகிறது....

ஓ.கே. நாம இன்னும் இரண்டு நாள்ல்ல அமெரிக்கா கிளம்புறோம்.....பயபுள்ள இருக்கான் அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்...நாம போறோம்ய்யா.....டண்டணக்க டண்டணக்க.....அப்படியே சீன் கட்டாகி ஏர்போர்ட் போவுது.... அங்கே அப்படியே பெர்மூடா கூலிங் கிளாஸ் கெட்ப்பல்ல ஏர்ஹோஸ்டஸ் இலியானா கூட ஒரு செம ராப் ராக் லோக்கல் குத்து பாட்டு....

இந்த டான்ஸ்ல்ல பதிவுலக மூத்த பதிவர்கள் கலந்து குத்து குத்துன்னு குத்தாட்டம் போட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது...

அப்படியே பிளைட் நீயுயார்க் ஏர்போர்ட்ல்ல லேண்ட் ஆவுது...அங்கே ஷாருக்கானை விசாரிச்ச அதே அதிகாரி நம்ம பதிவோடிகளை விசாரிக்குறார்....நம்ம பயபுள்ளக அங்கேயும் நக்கலும் நையாண்டியுமாப் பேச..தனி ரூம்க்கு கூட்டிட்டுப் போய் குத்த வைக்கிறாங்க...அங்கே ஒரு ஓரமா ஆல்ரெடி ஒருத்தர் குத்த வச்சு சுவத்தைப் பாத்தப் படி இருக்கார்....

மூணு பேரும் அவரைக் கண்டுக்காம இன்னொறு பக்கமாப் போய் உக்காருராங்க...

டாப் ஆங்கிள்...சைட் ஆங்கிள்...லோ ஆங்கிள்ன்னு சுத்தி சுத்தி கேமரா போவுது...அப்புறம் அந்த வெள்ளைக்கார ஆபிசர் வர்றார்...

ஒய் ஆர் யு இன் அமெரிக்கா..பர்பஸ் ஆப் விசிட்

லவ் ஆபிசர்... திஸ் பாய் சென்ஷி...லவ் ஒன் கேர்ள்...

நோ சென்ஷி.... சென் ஹி...ஆபிசர் சொல்ல

நோ ஹி... ஹி ஷி ஒன்லி....ஆயில்ஸ் விளக்க முயல...

ஆபிசர் சென்ஷியை எழும்பி நிற்க சொல்லுகிறார்...அவரை ஏற இறங்க பாத்துட்டு...

நோ ஷி.... ஒன்லி ஹி.... ஐ செக் ஹிம்....

"டேய் இது வேற மாதிரி போவுது...சமாளிடா..." குசும்பரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது..

"ஆபிசர் யு பார் மிஸ்டேக்கன்....ஹி ...ஹி ஒன்லி.... பட் நேம் ஷி.... சென்ஷி.... ஹி லவ் ஒன் கேர்ள்... ட்ரு லவ்...ஒகே..."

ஆபிசர் புரிஞ்ச மாதிரி தலையாட்ட நம்ம மக்களுக்கு தைரியம் வருது...

"லவ் ப்ராப்ளம்... நோ ஒர்க் அவுட்...வீ கம் இன் குரூப் டு வின் த லவ்..ஹி மேரேஜ் ஷி....

"நோ ஷி மேரேஜ் ஷி....சென்ஷி ரைட்"

"எஸ் எஸ் ஷி ( சென்ஷியைக் காட்டி) மேரேஜ் ஷி ( அப்படின்னு வேற பக்கம் பொண்ணைச் சுட்டி காட்டி சொல்லுறார் குசும்பர்

"ஓ.கே...கிவ் மீ த கேர்ள்ஸ் அட்ரஸ்... யு ஹேவ் இட்" அந்த ஆபிசர் கேட்க

டேய் சென்ஷி மாப்பி உன் லவ்வர் அட்ரஸைக் கேக்குறார் எடுத்து கொடுடா..அதைப் பாத்து புரிஞ்சுட்டு நம்மளை விட்டுருவார்.. அப்புறம் நம்ம புலி இந்நேரம் இங்கே வந்து இருப்பான்...வந்து நம்மைக் கூட்டிட்டுப் போயிருவான்டா....

சென்ஷி பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஆபிசரிடம் நீட்டுகிறார்..ஆபிசர் அதைப் படிச்சுட்டு செம கலவரமாகப் பார்க்கிறார் அவர் பார்வை இன்னொரு ஓரம் சுவத்தைப் பாத்து குத்த வச்சிருக்கும் அந்த இன்னொரு கேரக்டரையும் இவங்களையும் மாறி மாறி பாக்குறார்.. அப்புறம் போனை எடுத்து அவசரமா யாருக்கோ பேசுறார்...அடுத்த ஒண்ணு ரெண்டு நிமிசத்துல்ல திபு திபுன்னு ஒரு இருபது முப்பது அமெரிக்கா போலீஸ் பாய்ஞ்சு உள்ளே வர்றாங்க....

"ஆத்தி என்ன இது.... மொத்தப் போலீசும் இப்படி ரவுண்ட் கட்டுது.." ஆயில்ஸ் டெரர் ஆயிட்டப்பல்ல

"இரு இனியும் பொறுக்க முடியாது... நம்ம புலிக்குப் போனைப் போட்டுருவோம்..சைலண்ட்டா ஒரு செல்போனை எடுத்து சிபி மீண்டும் மூணு மிஸ்ட் கால் விடுறார்...மூணாவது கால் அடிக்கும் போது...

"ஆபிசர் போன் ரிங்கிங் இன் யுவர் பாக்கெட் ப்ளிஸ் பிக் அப்" அந்த இன்னொறு மூலையிலே இருந்து திரும்பாமலே சவுண்ட் வருது...

"இது நம்ம புலி குரல் ஆச்சே.... புலீஈஈஈஈஈஈஈஈ.....நீயா....." மூணு பேரும் பாசத்தோடு அந்த இன்னொரு மூலைக்கு பாய்கிறார்கள்

"கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்கியைக் கடன் வாங்கி சுட்டுருவேன்...உங்க சகவாசமே வேணாம்ன்னு தானே சூடான்ல்ல சூடா செட்டில் ஆனேன்..அப்பவும் வியாழக்கிழமை நைட் ஆனா குசும்பா நீயும் உங்க டேடியும் போன் போட்டு...நீ வெறும் புலியா....இல்ல....கொட்டை எடுத்த புளியான்னு கேட்டு கலாய்ச்சீங்க..அதை எல்லாம் மறந்து லவ் மேட்டர்ன்னு உதவ வந்தா இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."

"என்னத் தான் ஆச்சு...."

"அந்த பேப்பர்ல்ல இருந்த அட்ரஸ் என்னன்னு தெரியுமா? நானும் அவசரத்துல்ல மெயிலை பிரிண்ட் எடுத்துட்டு வந்து நீட்டுனேன்..இப்போ நீங்களும் நீட்டிட்டீங்க"

"ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்வர்ஸ் டேட் இஸ் த பிரசிடேண்ட் ஆப் அமெரிக்கா...." ஆபிசர் ஆக்ரோசமாக் கேக்க, நம்ம பயபுள்ளக நெஞ்சுக்கு நடுவே கையை இறுக்கி கட்டிட்டு பரிதாபமா சென்ஷியைப் பாக்குறாங்க...

"ஆமாடா மாப்பி...என் லவ்வர் அப்பா அமெரிக்காவுக்கே பிரசிடெண்ட் டா..ஆனா இப்போ ரிட்டையர்ட் ஆயிட்டதாச் சொன்னா....லவ்ல்ல பிக்ஸ் ஆயிட்டேன்... நீங்க தான் என்னைச் சேர்த்து வைக்கணும்..சென்ஷி சிரியசா பீலிங்க்கா பேச....

பகலவன் பிரமீளா என்னச் சொல்லுறார்ன்னா.....

மூடுய்யா நொண்ணை....பேக்கிராவுண்ட் மீசிக் கொடுத்த பில்டப்ல்ல எங்கே போறோம்ன்னு கூட தெரியாமா உன் கூட கிளம்பி வந்தேன் பாரு....இப்போ இங்கே ஹஸ்கூல்ல பாய் ஸ்குவட் பசங்கல்ல இருந்து அப்பரசட் போலீஸ் வரைக்கும் வந்து அன்டர் ட்ராயரோட நிக்க வச்சு கேள்வியாக் கேட்டு குடைய போறாங்க....

பகலவன் பீரமீளா என்னச் சொல்லுறார்ன்னா...

யோவ் டென்சன் ஏத்தாதே.... அன்டர் டராயரோட நிக்க வைப்பாங்களா...சூடான்ல்ல இருந்து சூடா கிளம்புனதுல்ல அதை எல்லாம் போட மறந்து கிளம்பிட்டேன்டா.....புலி பதற...

பகலவன் பிரமீளாவும் இவ்வளவு நேரமா அதைத் தான் சொல்ல முயற்சி பண்ணிட்டு இருந்தார்... நீயேச் சொல்லிட்ட... சிபிகுமார் மீண்டு சிந்தனையில் ஆழ்கிறார்..

அதே நேரம்...

"YES SIR...4 TERROISTS DETAINED...SUSPECTED TO BE AL QAEDA...WHITE HOUSE ADDRESS IN HANDS..THEY WERE PROCEEDING TOWARDS WHITE HOUSE...."

பதிவோடிகள் - 2


கலாய் கலாய் கலக்கலாய் கலாய்..... ஹேய் ஹேய்....

சைக்கிளை மிதிச்சுட்டு கையைக் காற்றில் ஆட விட்டுகிட்டே ஸ்டைலா நம்ம குசும்பன் ஒரு பொண்ணு பின்னாடி சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி போயிட்டு இருக்கார்...
அப்போ அங்கே குறுக்கே பாய்ந்து கை போடுகிறார் அபி அப்பா....


ஹே சன்...டியர் குசும்பன்....ஒரு பொண்ணைப் பாத்தா ஹீரோன்னா காதல் பண்ணனும்....அது தான் லாஜிக்.... இப்படி எப்பவும் எல்லாரையும் எங்கேயும் கலாய்க்கக் கூடாது....அது சரியா வராது..

செம சீரியசா அபிஅப்பா அட்வைஸ் பண்ண....சைக்கிளை சைட் ஸ்டாண்ட் போட்டுட்டு இறங்கி வர்றார்...

அலோ அலோ....ஓவர் பிலீங் எல்லாம் வேணாம்....காதல் எல்லாம் பண்ண தேவ் வேற கேரக்டர் புக் பண்ணியிருப்பாப்பல்ல... என்னையும் உங்களையும் ஒரு ரோல் கொடுத்து கூப்பிட்டா அதுவும் உங்களை டாடியாவும் என்னை சன்னாவும் கூப்பிட்டா எதுக்குன்னு தெரியாதா.... ஜஸ்ட் பார் கலாய்... பாக்குற எல்லாரையும் நான் கலாய்ப்பேன்.... கலாய்க்கறதுல்ல அப்போ அப்போ நான் கேப் விட்டா உங்க பிளாஷ் பேக் எல்லாம் எடுத்து எனக்குச் சொல்லி மோட்டிவேசன் பண்ணி என்னைக் கலாய்க்கறதுல்ல என்னை நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போய் விடணும் அது தான் உங்க ரோலோட வேலை ஓகே வான்னு கேக்குறார் குசும்பர்

அவ்வளவு தான் அப்படியே கையைச் சுழற்றுரார் அபி அப்பா...சூப்பர் ஸ்டார் மாதிரி அவர் கையிலே ஒரு கூலிங் கிளாஸ் வருது....இன்னொரு வாட்டி சுத்துரார் ஒரு கோட் வருது...அதை அப்படியே எடுத்து மாட்டுறார்...கை தட்டுரார்..குசும்பன் சைக்கிள் அபி அப்பா கிட்ட வந்து அதுவா பிரேக் அடிச்சு நிக்குது,,,அதுல்ல தாவி ஏறி உக்காராரு அபி அப்பா...

மீசிக் சேஞ்ச்..அப்படின்னு அபி அப்பா சவுண்ட் விட...ஓரம் போ...ஓரம் போ...அபி அப்பா வண்டி வருது...ஓரம் போ...ஓரம் போ..... கலாய் கலாய் கலக்கலாய் கலாய் கலாய்...ரீமிக்ஸும் ஒலிக்க சைக்கிளில் அதே பொண்ணை அபி அப்பா ரூட் விட்ட படி கலாய்க்க போகிறார்..

ம்ம்ம் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே நம்ம சிபி குமார், ஆயில்ஸ், அப்புறம் குசும்பன் மூணு நேரம் நெருக்கமான நண்பர்கள்...எப்பவுமே ஒண்ணாவே திரிவாங்க...ஒண்ணாவே இருப்பாய்ங்க....அவங்க தான் பதிவோடிகள்....மத்தவங்க எல்லாம் வெறும் பதிவர்கள்...

டேய் மச்சி... என்னடா இது....தப்பு இல்லையா....

குசும்பன் சிபிகுமாரோட லேப்டாப்பை நொண்டி நொங்கு எடுத்துகிட்டு இருந்தார்....என்னவெல்லாமோ அடிச்சு தேடிகிட்டு இருக்கார்....

டேய் குசும்பா... நண்பய்ன் நம்மளை நம்பி அவன் லேப் டாப்பையே கொடுத்துட்டு போயிருக்கான்...அதை இப்படி நொண்டுற.....வேணாம்டா..

மச்சி புதுசா பிரபுதேவாவைக் கலாய்க்க ஒரு மேட்டர் சிக்கியிருக்கு..அதுக்கு தோதாப் போட ஒரு 9தாரா போட்டோ கிடைக்கும்ன்னு தேடுறேன்..கிடைக்க மாட்டேங்குது...கூகிள் அடிச்சு தேடுனா..அது நேரா சிபிகுமார் ஐபி அட்ரஸ் கொடுத்து அங்கே போய் தேடுன்னு தொரத்தி அனுப்புது நான் என்னப் பண்ணுவேன்... 9தாராகிட்ட கூட இல்லாத பல ஸ்டில் இந்தாளு கிட்ட இருக்குதாம்...

இருந்தாலும் நண்ய்பன் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு கண்ட கண்ட சைட் எல்லாம் போய் கண்முழிச்சு...சேத்து வச்ச படம்டா அவனுக்கு தெரியாமா எடுக்குறது தப்புடா தெரிஞ்சா அவன் மனசு என்ன பாடு படும்......

எல்லாம் தெரியும்டா நொண்ணைகளா....9தாரா எல்லாம் நமக்கு செட் ஆவாதுன்னு நான் எப்பவோ பிகரை மாத்திட்டேன்டா.....டேய் ஆயில்ஸ் உன் லேப்டாப்ல்ல அஞ்சலி போட்டோ எதாவது மிச்சமிருக்கான்னு பாருடா...

குசும்பா... அப்படின்னு அப்பாவியா ஆயில்ஸ் சிபி சொன்னதைக் கேட்டு குசும்பன் பக்கம் திரும்ப...

ஆமா மச்சி... இப்போக் கொஞ்ச முன்னாலேத் தான் உன் லேப்டாப்பை நானே ரைட் அடிச்சு எல்லா பிகர் படத்தையும் எடுத்து ஊருக்கெல்லாம் விநியோகம் பண்ணேன்....இதை எல்லாம் நினைச்சு பீல் பண்ணாதே...மாப்பூ.....

அடப் பாவிகளா அப்போ நான் தான் அவுட்டா... ஆயில்ஸ் அப்பாவியா முழிக்க...

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...

மாப்ளே.... உங்களுக்கே தெரியும்...ஆன்மீகம் தான் எனக்கு எல்லாம்ன்னு.... எனக்கு தேவை எல்லாம்...நீங்க ஒரு 50 ஆன்மீக பதிவு போடணும்...

அப்புறம் அந்த ஹாலிவுட்ல்ல நான் தத்து எடுத்த பொண்ணை உங்க கூட டேட்டிங் அனுப்ப எனக்கு எந்த ஆட்சபேணையும் இல்ல...

மாமா ஹாரி பாட்டர்ல்ல வருமே அதே பொண்ணு தானே....

ஆமா மாப்பிள்ள...அதே பொண்ணு தான்...

அப்போ அங்கே கேட்டுக்கு வெளியே நிக்குற குசும்பன் இதைக் கேட்டு செம கடுப்பு ஆகி..

ஆயில்ஸ் மச்சி... இப்போ நான் அவுட்டா.... கே.ஆர்.எஸ் பொண்ணு ...கே.ஆர்.எஸ் பொண்ணுன்னு சொன்னானே சிபி குமார்....அது அவர் ஹாலிவுட் தத்துப் பொண்ணுன்னு சொல்லவே இல்லையேடா...ஏன் நாங்க ஆன்மீக பதிவு போட மாட்டோமா..... 50 என்ன....500 ஆன்மீக பதிவு போடுவோம்....கலாய்....கலாய்....ஓம்....கலாய்.....கலாய்...நமஹ....

ஆயில்ஸ் குசும்பனின் இந்த திடீர் அவதாரம் கண்டு ஜெர்க்காகி நிற்க....

மீண்டும் மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...

பதிவோடிகள் - 1

பதிவோடிகள் அறிமுகம்

இவர் தான் சிபி குமார்.... காதலுக்காக நாலஞ்சு வருசமா கோயில் கோயிலா போயிட்டும் வந்துட்டும் இருக்கார் அவர் கையிலே லேப் டாப் வேற..அதுல்ல ஒரு மொபைல் கனெக்ஷ்ன் வேற...என்னன்னு கேக்குறீங்களா....அவர் ஒரு பிரபல பதிவர்...அவர் மாமாவுக்கு ஒரு பொண்ணு...அந்த பொண்ணை இவர் கட்டணும்ன்னா இவர் எப்படியாவது ஒரு அம்பது ஆன்மீக பதிவாது போடணும்ன்னு கண்டிசன் போட்டிருக்கார் அவங்க மாமா....காதலுக்காக ஆன்மீகப் பதிவு போட நம்ம சிபி குமார் போகாத ஊர் இல்ல ஏறாத கோயில் இல்ல...அவர் பதிவுன்னு போட உக்காந்தா பாவம் அவருக்கு வர்றது எல்லாம் கலாய்த்தல்...இல்ல அதை விட கொடுமையா பின் நவீனத்துவம்..அவரும் என்னத் தான் பண்ணுவார்...அவர் மாமா வேற யாருமில்ல... பதிவுலகத்துல்ல ஆன்மீக சிங்கம்ன்னு பேர் எடுத்த நம்ம கே.ஆர்.எஸ் அய்யா தான்...( எப்பூடி)

இப்போ நாம பாக்குற இவர் ஆரணி ஆயில்ஸ்...தமிழ் சினிமால்ல புதுசா யாராவது ஒரு கதாநாயகியோ..தமிழ் பதிவுல்ல புதுசா யாராவது பதிவோ போட வந்திட்டா... அந்த நாயகியோட போட்டோ இவர் ஜிடாக்ல்லயும்...அந்த பதிவரோட பதிவுல்ல இவரோட கமெண்ட் குறைந்த பட்சம் ஒரு நாலு இல்ல அஞ்சாவது இருக்கும்....சொந்தமா அத்தைப் பொண்ணு இல்லாத நம்ம ஆயில்ஸ் மத்த எல்லாப் பொண்ணையும் மாமன் பொண்ணா நினைச்சு உருகுற ஒரு பாசக்கார தமிழ் பையபுள்ள இவருக்கு ஒரு ஆசை...எப்படியாவது ஒரு நாலு இங்கிலீஷ் பதிவு போட்டு ஹாலிவுட் பிகர் ஒண்ணையாவது கரெக்ட் பண்ணி மாயவரம் திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்து கும்மியடிக்கணும்ன்னு..அதுக்காக பல நாளா பல இங்கிலீஷ் பதிவை இவரும் பல மாதிரி படிச்சு உருப் போட்டு ரெடியாகிட்டு இருக்கார்... லேட்டஸ்ட்டா இவர் படிச்ச பதிவுல்ல இருந்த பாட்டை இப்போவும் இவர் ஆபிஸ்ல்ல உக்காந்து உரக்கப் படிச்சு உரு எத்திகிட்டு இருக்காராம்..அந்த பாட்டு...

TWINKLE TWINKLE LITTLE STAR HOWAI R PAATY VAAT WHAT U ARE
AAP ABOUT THE OLD MONK HIGH
LIKE A DIE MOND IN THE KAI

இவர் பேர் குசும்பர்....உலக ரேஞ்ச் இவர்...இவரைப் பத்தி இவரை விட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும்..அப்படின்னு இவரே சொல்லுவார்....கொஞ்சமா கொஞ்சமா கலாய்க்க ஆரம்பிச்ச இவர்...மூணு பதிவு போட்ட புது ஆரம்பிச்சு...அப்படியெ உள்ளூர் முக்கு சந்து பெருசு....வட்டம் ...மாவட்டம்...சதுரம்...ஸ்டேட்...சென்ட்ரல்..ஸ்டேட்ஸ்ன்னு கலாய்த்தலே டெவலப் பண்ணி போயிட்டே இருக்கார்...உலக லெவல்ல கலாய்க்கறதுக்கும் குசும்பலுக்கும் ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்கணும்ங்கறது தான் இவரோட லட்சியம்...அந்த லட்சியத்துக்காக வேர்ல்ட் பேங்க்ல்ல லோன் அப்ளை பண்ணிட்டு அப்படியே துபாயல்ல எதாவது ஷேக் கிட்ட கந்து வட்டிக்கு கடனா டாலர் கிடைக்குமான்னு பாக்க துபாய்க்கு வேலைக்கு போயிருக்கார்....எப்படியும் சீக்கிரம் அமவுண்ட் கிடைச்சுரும் யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு பெரிய லெவல் வர்றவன் போறவனை எல்லாம் கதற கதற கலாய்ச்சு செட்டில் ஆயிரலாம்ன்னு ஒரு முடிவோட இருக்கார் நம்ம ஆள் குசும்பர்...ஆக்சுவலா துபாய்ல்ல இவர் ஒரு ஷேக் புள்ளய டாவ் அடிச்ச கதையும் அதுக்கு இவருக்கு நம்ம படத்துல்ல டாடியா வர்ற கேரக்டர் பண்ண ஹெல்ப்பை எல்லாம் பின்னாடிப் பாக்கப் போறீங்க..ஆங் இவர் டாடி யாரா....அபி கிட்ட கெஞ்சி பர்மிசன் அவ டாடியைத் தான் நம்ம படத்துக்காக குசும்பரோட குசும்பு டாடியாக்கி இருக்கோம்

நம்ம கதையில்ல இவங்க மூணு பேர் தான் முக்கியமானவங்க... பதிவோடிகள்.....

நம்ம சிபி குமார் அப்பா சிபி பின்நவீனத்துவம் பத்தி பதிவு போடுறது பத்தி படு கேவலமா நம்ம சிபி குமாரை கலாய்க்கறார்...

டேய் சிபி....என்னடா பையன் நீ....குழலி மாதிரி சூடா அரசியலோ...கொத்தனார் மாதிரி குறுக்கா.....

அப்பா

குறுக்கெழுத்துன்னு முழுசா சொல்லுறதுக்குள்ளே தொண்டையில்ல வார்த்தை சிக்கிருச்சு,,,,வெட்டி மாதிரி பல்சுவையாவோ...கவிதா மாதிரி பொது கருத்தோ....லக்கி மாதிரி ஜனரஞ்சகமாவோ...எழுதாம பின்நவீனத்துவம்....என்ன எழவோ.....

அப்பா...அப்படியே நில்லுங்க.....உங்களுக்கு பின்னாடி என்ன இருக்கு....

சுவர்....

அதுக்கும் பின்னாடி.....

அது,,,,வந்து,,,,

திண்ணை...அப்படின்னு சிபி குமார் பாட்டி வாசல்ல இருந்து சொல்ல

அதுக்கும் பின்னாடி.....

சைக்கிள் இருக்குடா எடுபட்ட பையலே... பாட்டி உரலை எடுத்து சிபி குமார் மேல எறிய அதை ஸ்டைலா பிடிச்ச சிபி குமார்...தலை முடியை சிலுப்பி விட்டுட்டு...

அதுக்கும் பின்னாடி.....அப்படின்னு கெத்தா குரல் விடுரார்..

எல்லாரும் மவுனமா நிக்க....

பேக் கிரவுண்ட் அதிர... அது தான் அது தான் பின் நவீனத்துவம்.... சிலருக்கு பின் மட்டும் தெரியும்... தங்கச்சிக்கு அவ சைட் அடிக்கிற பையன் நவீனை மட்டும் தெரியும்....எனக்கு பின்நவீனத்துவம் தெரியும்...உங்களுக்கு எதுவும் தெரியாது...நான் கிளம்புறேன்...என்னைப் பதிவுலகம் அழைக்குது....அவர் ஸ்லோ மோஷனில் வெளியேற மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாட்டு ஹய் டெசிபலில் அலறுகிறது....



பதிவோடிகள் ஆரம்பிச்சாச்சுப்பா....ஒப்பனிங் எப்பூடி?
விவாஜி வெற்றி வரிசையில் தமிழ் பதிவுலகம் அதிர.....

நாயகன் பிரபல பதிவர் சிபிகுமார்.....
நம்ம ஆயில்ஸ்....
குசும்பன்....
அபி அப்பா...
இளா....
இவர்களுடன் உங்கள் பாசத்துக்குரிய கே.ஆர்.எஸ் கலக்கப் போகும்

கச்சேரி பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்


இது ஒரு தேவ் படைப்பு

உங்களுக்காக பாடல் வரிகள் இன்று முதல் தமிழ் பதிவுலகின் திக்கு எட்டிலும்

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ

உறங்கும் பதிவு கதறி அழட்டும்
போடும் மொக்கையில் பதறி எகிறட்டும்
பின்னூட்டக் கயமை மீண்டும் வரட்டும்
கும்மி தொடங்கட்டும்
மல்டிபிள் ஐடி ஆட்டம் அதிரட்டும்
அனானி கமெண்ட் அள்ளி தெளிக்கட்டும்
பின்நவீனத்துவம் பின்னாலே புரியட்டும்
மொக்கையே ஜெயிக்கடும்

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ

ரிசசெசன் என்ன ப்ரொபசன் என்ன
மொக்கைக்கு முடிவே இல்லை
எல்லாமே மொக்கை என்றால்
கவலைகள் எதுவும் இல்லை
பதிவிடும் நேரம் மட்டும் மொக்கையென்று தேங்கிடாதே
அதை படிக்கும் போதும் மொக்கை தான்னு மறந்திடாதே
உருப்படின்னு எதுவுமில்லை
மொக்கைப் போட்டபின் வேற சூனியமில்லை... மொக்கையே

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ

கும்மிகள் தீருமட்டும் போடுவதா மொக்கையாகும்
அனானி ஆட்டமெல்லாம் பதிவுலக புது நீதியாகும்
குரூப்பான கும்மியெல்லாம் கொஞ்ச நாளில் வீழும் வீழும்
மொக்கையாலே சேரும் கும்மி எந் நாளும் வாழும் வாழும்

ரூல்ஸ்ன்னு மொக்கைக்கு இல்ல
புல்மீல்ஸ்ன்னா எப்பவும் கூட்டம் உண்டு மொக்கை போடவே

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ

கதறும் மொக்கைகள் தொலைந்தது என்ன
அதிரும் அனானிகள் ஒழிந்தது என்ன
பின்னூட்டக் கயமை முடிந்ததது என்ன
பதிவுலகே என்ன
நேற்றைய கும்மி திரும்புவது என்ன
இன்றைய குசும்பு மயங்குவது என்ன
லொள்ளும் ஜொள்ளும் கலப்பது என்ன
சொல் சொல் பதிலென்ன

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ

-சிறப்பு நன்றி நம்ம ஆயில்ஸ்

Blogger Templates by Blog Forum